பாடசாலைக்கீதம்

கல்லூரிக் கீதம்

பல்லவி

ஜெய ஜெய மங்களகல்லூரிமாதா
ஜெய ஜெய மங்கள ஜெயதே (ஜெய)

அனுபல்லவி


உத்தமாதலைவர்கல்லூரி ஸ்தாபகர்
அத்தியார்தம்புகழ் துதிப்போம் (ஜெய)

சரணம்


மனதினில் மாண்பும் செய்கையிற் சிறப்பும்
நினைவுறுகுறியெனக் கொண்டோம்
நமதுறுதுணையாம் இறைவன்
இணைமலரடிகை தொழுது
எமதுறு கடமைகள் புரிவோம் (ஜெய)

ஓங்குக ஓங்குக நல்லறமெங்கும்
ஓங்குக விஞ்ஞானத் துறைகள்
என்றும் நின்றே நன்றாய்
எமதெழில் நீர்வையில் வாழி
ஓங்குக கல்லூரிமாதா (ஜெய)

(இன்றைய கல்லூரியின் கீதம் அமரர் பண்டிதை சத்தியதேவி துரைசிங்கத்தினால் ஆக்கப்பட்டதாகும்.)