தமிழில்

அத்தியார் இந்துக் கல்லூரியின் வரலாற்றுச் சுருக்கம்
“எந்தையூம் தாயூம் பிறந்து வளர்ந்து இருந்ததும் இந்நாடே :
அவர் முந்தையராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணமிளிர்ந்து சிறந்ததும் இந்நாடே
அதை வந்தனை செய்து மனத்திலிருத்தி என் வாயூற வாழ்த்தேனோ
இதை வந்தே மாதரம்இவந்தே மாதரம் என வாழ்த்தி வணங்கேனோ”

மேற்கூறிய மகாகவியின் வாழ்த்துரை எமக்கும் இங்கு பொருத்தமாயிற்று.
பத்தொன்பதாம் நூற்றாண்டு அதன் முதற் கால் நூற்றாண்டுப் பகுதி நம் நாட்டின் கல்வி வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சிக் காலம். அரசின் கல்விக் கொள்கையிலும் ஒரு தாராளப்போக்கு. மத, மொழி ரீதியில் தனியாரும் சபைகளும் கல்விக் கூடங்களை அமைக்க அரச ஊக்குவிப்பு வடக்கிலும் தெற்கிலும் நல்லைநகர் நாவலர் போன்ற சீர்திருத்தத் தலைவர்களின் முன் மாதிரியிலான பணிகள்.
இத்தகைய அலையின் விளைவாக நீர்வேலிக் கிராமத்தில் அன்று பலர்அறிந்த“பண்டிதர்கோட்டம்” குடும்பத்தைச் சார்ந்த அக்குடும்பத்தின் புகழையூம் நம் நாட்டின் அறிஞர் குழாமையூம் அணிசெய்த ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதரும் ஸ்ரீசிவப்பிரகாச பண்டிதரும் 1850 ம் ஆண்டளவில் ஆரம்பித்து நிர்வகித்ததே நீர்வேலி பண்டிதர் பள்ளியாகும். அதுவேஇ1880ம் ஆண்டளவில் “நீர்வேலி சைவப்பிரகாச வித்தியாசாலை” ஆக மாற்றமடைந்தது. . அப்பாடசாலையில் அன்று 7ம், 8ம் வகுப்புக்கள் வரை இருந்தன. அந்தணச் சிறுவர்களுக்கு பிரத்தியேகமான புராண – இதிகாச–சமஸ்கிருத வகுப்புகள் இங்கே பலவாண்டுகள் நடைபெற்றன. . அதற்குச் சான்றாக அமையூம் பலரில் ஒருவரே எமது கிராமத்திற்கு வனப்பினை அவர் வாழ்ந்த காலத்தில் நல்கிய பிராமணப் பெரியார்களில் ஒருவராகிய நீர்வேலி அருள்மிகு வாய்க்காற்றரவை விநாயகர் ஆலய பிரதம சிவாச்சாரியாரும் மாவட்டரீதியில் மதிப்புடன் வாழ்ந்த சிவஸ்ரீ சுப்பிரமணிய ஆபதோத்தாரண குருக்கள் (பிஷாடனகுருக்கள்) ஆவர். அன்னார் குருத்துவப் பணியூடன் ஆசிரியராகவூம் சிலகாலம் பணியாற்றிய சிறப்புமுடையவர். நூற்றாண்டு காலம் மேல் இயங்கிய பாடசாலை ஸ்ரீ சிவப்பிரகாசபண்டிதரின் மறைவின் பின் அவரின் மகன் நடராஜப் பண்டிதரால் நிர்வகிக்கப்பட்டுவரும் காலை பல்வேறு சுழ்நிலைகளால் குறிப்பாக பொருளாதார வளம் குன்றியமையால் பண்டிதர் நடராஜா பாடசாலையை விற்பதற்கு எண்ணினார். அக்காலத்தில் அரச ஆதரவூடன் செல்வாக்குப் பெற்றிருந்த மிஷனரிமார்கள் சுமார் எண்பதாண்டுகள் சைவச் சான்றௌரால் ஊட்டி வளர்க்கப்பட்ட கல்விக் கூடத்தை வாங்கி நடாத்த முயன்றனர். இந் நிலையில் அச்சந்தர்ப்பத்தை நழுவவிடாது நீர்வேலி முதலியார் அத்தியார் அருணாச்சலம் அவர்கள் அதனை விலைக்கு வாங்கித் தன் உடமையாக்கினார். அப்போது அவர் கொழும்பு கொமர்சியல் கொம்பனியில் களஞ்சியப் பொறுப்பாளர் பதவிக்கு உயர்ந்தவர். அவர் பொருளாதார வசதி அதிகம் படைத்தவரல்லர். இருப்பினும் நாவலர் வழியில் தாபிக்கப்பட்ட இந்துக் கல்வித் தாபனமொன்று பிற சமயத்தவர்கைகளுக்கு போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தினால் தனது எண்ணத்தை நிறைவேற்ற முயற்சித்தார். எத்தகைய பெருமனம் அவருக்கு சைவப்பிரகாசசாலைக்குரிய நிலமும் கட்டடமும் மாத்திரமன்றி அதையடுத்து இருந்த நிலத்தையூம் வாங்கி 1929ம் ஆண்டு நீர்வேலி அத்தியார் இந்துப் பாடசாலையை நிறுவினார். தமிழ்மொழி மூலப் பாடசாலையூடன் ஆங்கிலமொழி மூலமான நீர்வேலி ஆங்கில இந்துப் பாடசாலையையூம் ஆரம்பித்தார். இரண்டு பாடசாலைகளை நிறுவித் தமது மக்கள் கல்வி பெறவூம் பண்பாட்டு விழுமியங்களைப் பேணவூம் கிராமத்தின் தரத்தை உயர்த்தவூம் அர்ப்பணிப்புடன் மனம், மொழி மெய்களால் அரும்பாடுபட்ட வள்ளல் தான் எமது கல்லூரி நிறுவூநரான முகாந்திரம் முதலியார் சமாதானநீதவான் பட்டங்களைக் கௌரவமாகப் பெற்றஅமரர் அகத்தியார் அருணாசலம் அவர்கள்.
1929 இல் உதயமானஆங்கிலப் பாடசாலை நீர்வேலி இந்து ஆங்கிலப் பாடசாலை என்ற பெயருடன் உருவாகியது.(NEERVELY HINDU ENGLISH SCHOOL) ஆங்கில பாடசாலையின் ஆரம்பகால இலச்சினையூம் மகுடவாக்கியமும் தொடர்ந்து பேணப்படவில்லை. 1958 க்கு பின்னர் அதுமாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காரணம் நாமறியோம். ஆரம்ப கால மகுடவாக்கியம் “ACT WELL YOUR PART ” (உனது பணிகளைச் சிறப்பேயாற்றுக) என்றே இருந்தது. இக் கால மகுட வாக்கியம் “ பொய்யா விளக்கே விளக்கு “ ( TRUTH IS LIGHT)
தனது சொத்துக்களை விற்று தனது சம்பளப் பணத்தைச் செலவிட்டு கொழும்புச் செட்டிமாரிடமும் வங்கியிலும் கடன் பட்டு ஆசிரியர்களின் அன்பளிப்பைப் பெற்று ஒரு சந்தர்ப்பத்தில் பாடசாலையையே ஈடுவைத்து அத்தியார் இந்துக் கல்லூரியை இயக்குவதற்கு எங்கள் நிறுவூநர் பட்டபாடு சொல்லுந்தரமன்று. அரசாங்க உதவி நன்கொடையானது தமிழ் பாடசாலைக்கு கிடைத்த போதிலும் ஆங்கிலப் பாடசாலைக்கு கிடைக்கவில்லை. மாணவர் தொகையூம் 100 – 120 ஐத் தாண்டாத நிலையில் பல சிரமங்களுக்கு மத்தியில் 1946ம் ஆண்டு முதன் முதலாக s.s.c. (ஆங்கிலமொழி) வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் 10க்கும் குறைவாகவே மாணவர் s.s.c வகுப்பிலிருந்தனர். s.s.c. பரீட்சையில் முதன் முதலாக 1948 இல் ஆங்கிலமொழி மூலம் 8 மாணவர்கள் தோற்றினர். கட்டிடவேலைகளை அசுரவேகத்தில் பூர்த்திசெய்தமை. 1945 கன்னங்கரா கல்விச் சீர்திருத்தப் பிரகாரம் தமிழ் ஆங்கிலப் பாடசாலைகளை ஒருங்கிணைத்து அத்தியார் இந்துக் கல்லூரி  இயங்க ஆரம்பித்தது.
இன்றைய இல்லங்கள் முதல் முதலாக 1949 இன் பிறகே உருவாக்கப்பட்டன. அதற்கு முன்னர் இல்லங்கள் இருக்கவில்லை. இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. இன்றைய மூன்று இல்லங்களுக்கும் முறையே எவரையூம் வியக்க வைக்கக் கூடியதாக அஜந்தா, கைலாஸ், சிகிரியா என்ற நாமங்கள் சு+ட்டப்பட்ட. இவ் இல்லங்களின் பெயர்களைத் தெரிந்தெடுத்து சு+ட்டிய பெருமை உப அதிபர் ஸ்ரீமான் க.அருணாசலம் அவர்களுக்கே உரியது.
2004 ம் ஆண்டு கல்லூரியின் பவளவிழாவை முன்னிட்டு பவள விழா நிகழ்வூகளில் ஒன்றாக கல்லூரி முன்றலில் நிறுவூனரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இவ் உருவச் சிலையானது அவரது பேரப்பிள்ளைகளின் நிதி அன்பளிப்பினால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்கள் பழைய மாணவரும் பவளவிழாச் சபை உறுப்பினருமாகிய திரு.இ.தியாகராசா அவர்கள் மற்றும் நிதி அன்பளிப்பை முன்னின்று வழங்கிய இலண்டனில் வாழும் பழைய மாணவர் திரு.மா.திருவாசகம் அவர்களும் ஆவார்.
அவர் கட்டிய“கல்விக்கோவில்” இன்று ஏறத்தாழ 800 மாணவர்களையூம் 43 அசிரியர்களையூம் ஓரளவூக்கு நிறைவான பௌதிக, மனித வளங்களையூம் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தின் 1c பாடசாலைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகின்றது.