புவியியல் விஞ்..

கல்வியமைச்சின் சுற்று நிரூபத்துக்கமைய 2012 யூன் 15 இலிருந்து இப்புவியியல் விஞ்ஞான சங்கம் இப் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுகிறது. இதன் பொறுப்பாசிரியராக திரு. இ.நாகேஸ்வரன் அவர்களும் தலைவராக செல்வன் தி.ஜெகன் செயலாளராக செல்வி த.சாம்பவி பொருளாளராக திருமதி.ற.சாந்தலிங்கம் ஆகியோர் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனர்.

இதன் செயற்பாடுகளாக களச் சுற்றுலாக்களை ஒழுங்கமைத்து மேற்கொள்ளல், மாணவர்களின் பொது அறிவினை மேம்படுத்துவதற்காகச் சுவர் விளம்பரப் பலகையில் பொது அறிவு அம்சங்;களைக் காட்சிப்படுத்தல், பாடசாலைமட்டத்தில் சிரமதான நடவடிக்கையில் ஈடுபடல் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏதிர் காலத்தில் இதன் செயற்பாடுகள் மேலும் உயர்வடைய வேண்டுவதுடன் கழகத்தின் உறுப்பினர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.