நலன்புரிக் கழகம்

இக்கழகமானது பாடசாலையில் ஆசிரியர்கள், கல்விசாரா ஆளணியினரின் நலன்களைப் பேணி அவர்களிடையே நல்லுறவுகளை வளர்த்துச் செயற்பட்டு வருகின்றது. 2013ம் ஆண்டின் தலைவராக திரு.ம.கெனடி செயலாளராக திரு.வ.தயாநிதி பொருளாளராக திருமதி.நி.சோமாஸ்கந்தனும் செயற்பட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஆளணியினர் இடமாற்றம், இளைப்பாறுதல், பதவியுயர்வு என்பவற்றால் பாடசாலையை விட்டு விலகிச் செல்லும் போது பிரிவுபசார நிகழ்வுகளை நடாத்திக் கௌரவிப்பதுடன் பதவியுயர்வுகள் பெறும் போது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றது. கழக உறுப்பினர்களது இன்ப, துன்ப நிகழ்வுகளில் கலந்து பங்குகொண்டு மனிதநேயத்தை வெளிக்காட்டி வருகின்றது. ஓய்வு நேரங்களில் அங்கத்தவர்கள் பொது அறிவினைப் பெற்றுக்கொள்வதற்காக நாளிதழ்களை வாங்கி ஆசிரியர் ஓய்வறையில் வைக்கப்படுகின்றது. இக்கழகத்தின் செயற்பாடுகள் தமது அங்கத்தவர்களுடன் நின்று விடாமல் பாடசாலை, சமூகம் என்று தனது செயற்பாடுகளை விஸ்தரித்து சமூக உறவையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.