சாரணியம்

திரு. ஆ.பேரின்பநாயகம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் திரு.கா.குமாரபரனைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு இயங்கி வரும் சாரணியம் தற்போது மிகவும் இயங்கியல் தன்மை கொண்ட அமைப்பாக செயற்படுகின்றது. இவ்வமைப்பில் தற்போது மாணவர்கள் விரும்பி இணைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. 38 அங்கத்துவர்கள் தற்போது இவ்வமைப்பில் உள்ளனர். மேலும் பல மாணவர்கள் இவ்வமைப்பில் இணைந்து சேவை செய்கின்ற மனப்பாங்கை வளர்க்க வேண்டும். அத்துடன் விருதுகளையும் பெற வேண்டும். சாரணர் அமைப்பில் இணைந்துள்ள 38 அங்கத்துவர்களில் 19 பேர் மிக விரைவில் சின்னம் சூட்டப்படவுள்ளனர். எமது சாரணியத்தில் இணைந்துள்ள மாணவர்கள் பாடசாலை நிகழ்வுகளுக்கு உதவி வருவதோடு நீர்வேலி கந்தசுவாமி கோயில் தேர் உற்சவத்தின் போதும் தமது சேவையை வழங்கினர்.

மேலும் ஆண்டு தோறும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற சாரணர் வேலை வாரத்தில் சமூக சேவைகளைச் செய்து நிதி திரட்டி உதவுகிறார்கள். சாரணர் துருப்புத் தலைவர்கள் 04 பேரும், உதவி சாரணர் துருப்புத் தலைவர்கள் 04 பேரும், கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி நெறியில் பங்கு கொண்டார்கள். இதன் மூலம் தமது ஆளுமைப் பண்பை விருத்தி செய்து தலைமைத்துவத்தை ஏற்று நாட்டிற்கு உழைப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதே சாரணியத்தின் நோக்கமாகும். எமது சாரணிய வளர்ச்சிக்கு உதவி வரும் சாரண உதவி மாவட்ட ஆணையாளர் திரு.வே.சண்முகலிங்கம் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவிப்பதுடன் எமது சாரணிய வளர்ச்சிக்கு மேலும் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

P3160685