சமூக விஞ்ஞானம்

கல்வியமைச்சின் சுற்று நிரூபத்துக்கமைய எமது கல்லூரியில் சமூக விஞ்ஞான மன்றம் ஆரம்பிக்கப்பட்டு செயலாற்றி வருகின்றது. இதன் பொறுப்பாசிரியராக திரு சி குலேந்திரராசா அவர்களும் தலைவராக செல்வன் நி.திலக்சன், செயலாளராக செல்வன் யோ.கீர்த்திகன,; பொருளாளராக திருமதி.த.சதீஸ்கரன் ஆகியோர் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனர்.

இக் கழகத்தினர் மாணவர்களின் சமூக விஞ்ஞான அறிவை விருத்தி செய்வதற்காகப் போட்டிகளை நடாத்துவதுடன் பொது அறிவு விடயங்களை அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தி வருகின்றனர். மேலும் மாணவரின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் பொருட்டு வரலாறு மற்றும் புவியியல் செயலமர்வுகளை நடாத்தி வருகின்றனர். இக் கழகத்தினரின் செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதுடன் மேலும் இதன் செயற்பாடுகள் விரிவடைய வேண்டுகின்றேன்.