சதுரங்க கழகம்

எமது கல்லூரியின் புதிய அத்தியாயமாகச் சதுரங்கக் கழகம் கடந்த 04.01.2012 இல் உதயமானது. இதன் பொறுப்பாசிரியராகத் திருமதி.இ.சிவகுமாரன் அவர்கள் செயற்படுகிறார். இதன் தலைவராக செல்வன்.வி.வாசவன், செயலாளராக செல்வி.சி.தர்சினி, பொருளாளராக செல்வி.பா.அனுஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு கழகமானது 40 இற்கு மேற்பட்ட அங்கத்தவர்களுடன் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது.

யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனங்களின் போட்டியில் ஆண் அணி, பெண் அணி என இரு அணிகளும் பங்கு பற்றி 12ம் இடத்தை மாவட்ட ரீதியில் முதற் தடவையாகப் பெற்றுக் கொண்டது. இதே போன்று தனிநபர் சதுரங்கப் போட்டியில் பங்கு பற்றிய எமது பாடசாலையைச் சேர்ந்த 15பேரில் செல்வன்.பா.பாலகிரி, செல்வன்.எஸ்.மதிவிஜய், செல்வன்.வி.வாசவன் ஆகியோர் 03 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர்.

இக் கழகத்தின் முதற் செயற்பாடாக யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளன செயலாளர் திரு.கே.ஆதவன், திருமதி.பா.ஆதவன் ஆகியோரினால் பயிற்சிப் பட்டறை நிகழ்வு 17.01.2012 இல் ஆரம்பித்து இடம் பெற்றமை வளர்ச்சியின் மைல்; கல்லாகும். 15வயது, 19வயது பிரிவில் தலா 20 மாணவர்கள் வீதம் பயிற்சி பெற்று போட்டிகளில் பங்கேற்க வளப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் எமது கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டியில் நடாத்தப்பட்ட போட்டியானது 15 வயதின் கீழ், 15 வயதின் மேல் என இரு பிரிவாக இரு பாலாரிடையேயும் நடாத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற இல்ல அணியினருக்கு வெற்றிக் கேடயமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. வீரர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்வையும் ஏற்படுத்தியது. இதன் தீர்ப்பாளராக திரு.வு.இராஜசிங்கம், திருமதி.இ.சிவகுமாரன் ஆகியோர் பங்குபற்றினர்.

வாரந்தோறும் பயிற்சிகள் சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றமையால் விளையாட்டு வீரர்களின் வினைத்திறன் அதிகரித்து வருவதை அவதரனிக்க முடிகின்றது. ஏதிர்காலத்தில் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்ற பேரவாவுடன் மாணவர்கள் போட்டிக்குத் தயாராகின்றனர், என்பதில் ஐயமேதும் இல்லை. இவர்களை வழிப்படுத்தும் பொறுப்பாசிரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.