மாணவ தலைவர்

மாணவர் முதல்வர் சபை

இச் சபையானது பாடசாலை அதிபர் திரு.செ.பத்மநாதன் அவர்களது மேற்பார்வையினதும் வழிகாட்டுதலுடனும் சிறப்பாக இயங்கி வருகின்றது. இச் சபையில் 20 அங்கத்தவர்கள் உள்ளார்கள். இவர்களில் 10 ஆண் அங்கத்தவர்களும், 10 பெண் அங்கத்தவர்களும் உள்ளார்கள். மாணவர் முதல்வர் தெரிவிற்காக விண்ணப்பம் கோரப்பட்டு கல்வித்தகைமை, விளையாட்டு மற்றும் ஏனைய போட்டிகளில் பெற்ற நிலை, கழக, மன்றச் செயற்பாடுகளில் வகிக்கும் நிலை என்பவற்றிற்குப் புள்ளித் திட்டத்தின் அடிப்படையில் புள்ளியிடப்பட்டு கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களை முகாமைத்துவக் குழு ஒழுக்கம் தொடர்பாக ஆராய்ந்து மாணவ முதல்வர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். இவ் வருட மாணவர் முதல்வர் சபையின்

சிரேஷ்ட மாணவர் தலைவன் : செல்வன். த.தபீந்திரன்
சிரேஷ்ட மாணவர் தலைவி : செல்வி. ப.நடனபாதம்
உதவி சிரேஷ்ட மாணவர் தலைவன் : செல்வன் .இ.ரஜீவன்
உதவி சிரேஷ்ட மாணவர் தலைவி : செல்வி .நி.தர்மலிங்கம்

ஆகியோர் செயற்படுகிறார்கள். பாடசாலையின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பேணுவதில் பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து இச் சபை செயற்படுகின்றது. .பாடசாலையின் நிகழ்வுகளைச் சிறப்பாக நடாத்துவதற்கு இவர்களின் பங்களிப்புப் பெறப்படுகின்றது. மாணவர் முதல்வர் சபைக்குத் தெரிவு செய்யப்படுவதன் மூலம் மாணவர் தமது ஆளுமை, தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது. இவர்களது சேவை மேலும் சிறப்புற வாழ்த்துவதோடு எனது நிர்வாகப் பணிக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி கூறுகின்றேன்.

P4020304