விளையாட்டு

எமது பாடசாலையில் விளையாட்டுத் துறைக்கு நிரந்தர ஆசிரியர் இல்லாத போதிலும் பாடசாலையின் விளையாட்டுத் துறை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக 2012 ஆம் ஆண்டு முதலாம் தவணை மெய்வன்மை விளையாட்டுக்கள் , பெருவிளையாட்டுக்கள் என்பவற்றின் போட்டிகள் நடைபெறும் காலத்தில் விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பாக ஆசிரியர்கள் எவருமே இல்லாமல் விளையாட்டுத் துறையை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. அவ் வேளையில் எனக்கு உறுதுணையாக விஞ்ஞான ஆசிரியர் திரு. B.J.நிரேஷன் விளையாட்டுத் துறையின் பொறுப்பையேற்று வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெறவும், கோட்ட, வலயமட்ட விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களைப் பங்குபற்றச் செய்து பல வெற்றிகளைப் பெறவும் அர்ப்பணிப்புடன் அயராது செயற்பட்டார். அவருக்கும், அவருடன் துணையாக நின்று செயற்பட்ட ஆசிரியர்கள் எல்லோருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

2012 ஆம். ஆண்டு இல்ல விளையாட்டுப் போட்டிக்குப் பிரதம விருந்தினராக எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும் தற்போதைய பிhதிக்கல்விப்பணிப்பாளருமான திரு.இ.குணநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராகக் கோப்பாய் கோட்டக்கல்வி அதிகாரி திரு.வே.பாலசுப்பிரமணியம் அவர்களும், கௌரவ விருந்தினராக நீர்வேலி 27 வது காலாட் படைப்பிரிவின் பொறுப்பதிகாரி Lt.Col.விஜயவர்த்தன அவர்களும் கலந்து சிறப்பித்தனர். பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் இல்ல விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

கோப்பாய் கோட்ட மெய்வன்மைப் போட்டியில் எமது பாடசாலை 3வது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. கோட்ட மட்டத்தில் 60 வெற்றி இடங்களையும், வலய மட்டத்தில் 11 வெற்றி இடங்களையும், மாவட்ட மட்டத்தில் 06 வெற்றி இடங்களையும், மாகாண மட்டத்தில் 02 வெற்றி இடங்களையும் பெற்று தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள 02 போட்டிகளிற்கு எமது வீரர்கள் தெரிவாகிப் பங்குபற்றவுள்ளனர்.

பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் கோட்ட மட்டத்தில் 15 வயதின் கீழ்ப் பிரிவு 3ம் இடத்தையும், 17 வயதின் கீழ்ப் பிரிவு 1ம் இடத்தையும் பெற்றுச் சம்பியனாகவும், 19 வயதின் கீழ்ப் பிரிவு 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. வலய மட்டத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் 15 வயதின் கீழ்ப் பிரிவு 2ம் இடத்தையும், 17 வயதின் கீழ்ப் பிரிவு 1ம் இடத்தைப் பெற்றுச் சம்பியனாகவும், 19 வயதின் கீழ்ப் பிரிவு 3ம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

கோட்ட மட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் 17 வயதின் கீழ்ப் பிரிவு 3ம் இடத்தையும்,19 வயதின் கீழ்ப் பிரிவு 2ம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

கோட்ட மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் 16 வயதிற்குட்பட்ட அணி 3ம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

DSI நிறுவனத்தினால் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் 15 வயது பெண்கள் அணியினர் மாவட்ட மட்டத்தில்3ம் இடத்தையும், மாகாண மட்டத்தில் 2ம் இடத்தையும் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத்தெரிவாகினர். இவர்களுக்குப் பயிற்சியளித்த பயிற்றுனருக்கும், பொறுப்பாசிரியர் திரு.ம.சசிக்குமார் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.