முந்திய பதிவுகள்

ஸ்தாபகர் குறித்த பாடல்


ஸ்தாபகரின் அமரத்துவத்திற்கு பின்னர் வெளிவந்த மலரில் எமது பாடசாலையின் மிகப் பழைய மாணவனும் சிறந்த ஆங்கில ஆசானுமாகிய திரு.த.ந.பஞ்சாட்சரம் அவர்களால் இயற்றப்பட்ட பாடல் ஒன்று அவரது சிரார்த்த தினத்தின் போதும், கல்லூரியின் விழாக்களின் போதும் இசைக்கப்பட்டு வருகின்றது. அப் பாடல் பின்வருமாறு

அகரவரிசையில் “அத்தியார்” தோற்றம்
அத்தியார் அவர்களை அறியார் உளரோ!
ஆர்வம், ஆக்கம், அவரின் பண்பு
இவரின் பள்ளியே ஊரின் சிறப்பு
ஈவதுவிலக்கேல் இவரின் குறிக்கோள்
உழைப்பெலாம் தமது பள்ளிப் பணிக்கும்
ஊரின் வளத்திற்கு உவந்த வள்ளல்!
எங்கும் பணிகள்! எங்கும் தொண்டுகள்!
ஏவாதாற்ற முன்வந்த முதல்வன்.
ஐபதினைந்து ஆண்டுகள் வாழ்ந்து
ஒப்பற்றமுறையில் சீருடன் சிறந்து
ஓயாதுழைத்துப் பெரும் புகழ் பெற்றோன்!
ஒளவை மொழிப்படி அறநெறி ஒழுகினோன்
இஃது எவரும் அறிந்திடல் இனிதே!